மூத்த தலைவர்களிடம் பணம் கேட்கிறது காங்கிரஸ்

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ், 'கட்சியின் மூத்த தலைவர்கள் ஆண்டு தோறும், 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.மத்தியில் 2014ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன்பின் பல மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.இதனால் காங்கிரஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகிறது. இதை சமாளிக்க செலவுகளை மிகவும்
 மூத்த தலைவர்களிடம் பணம் கேட்கிறது காங்கிரஸ்

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ், 'கட்சியின் மூத்த தலைவர்கள் ஆண்டு தோறும், 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.

மத்தியில் 2014ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன்பின் பல மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.இதனால் காங்கிரஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகிறது. இதை சமாளிக்க செலவுகளை மிகவும் குறைக்கமுடிவு செய்து உள்ளது.

இது பற்றி கட்சியின் பொருளாளர் பவன் பன்சால் கூறியதாவது:காங்கிரஸ் சார்பில் பெரிய விழாக்களை நடத்த வேண்டாம் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.கட்சிப் பணிக்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிர்வாகிகள், ரயில்களிலேயே பயணம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.,க்களாக இருக்கும் பொதுச் செயலர்கள் தங்களுக்கு வழங்கப்படும் விமான பயண சலுகையை கட்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.நிதிநெருக்கடியை சமாளிக்க, எம்.பி.,க் கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆண்டுதோறும்,50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங் கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy - Erfelden Reidstadt,ஜெர்மனி
15-ஆக-202116:42:21 IST Report Abuse
Ramamoorthy நம்ம சிதம்பரம் சார் கார்த்தி கிட்ட இல்லாத பணமா ? நேஷனல் ஹெரால்ட் கேஸ்ல போன 2000 கோடி என்னாச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X