சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்பாடி அருகே மீண்டும் கொரோனா பரிசோதனை துவக்கம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வேலுார்:தமிழக - ஆந்திரா மாநில எல்லையான, காட்பாடி அருகே மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்கியுள்ளது.கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதையடுத்து வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம், சித்துார், திருப்பதி, திருமலை, காளஸ்திரி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில அரசு, தனியார் பஸ்கள் அந்தந்த மாநில

வேலுார்:தமிழக - ஆந்திரா மாநில எல்லையான, காட்பாடி அருகே மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்கியுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதையடுத்து வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம், சித்துார், திருப்பதி, திருமலை, காளஸ்திரி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில அரசு, தனியார் பஸ்கள் அந்தந்த மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

வேலுாரில் இருந்து சித்துாருக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து சிறிது துாரம் நடந்து சென்று ஆந்திரா மாநில பஸ்களில் பயணிகள் செல்கின்றனர். தற்போது இரு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லையை கடந்து செல்வர்களுக்கு, நேற்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பரிசோதனைக்கு மறுப்பவர்களை திருப்பியனுப்புகின்றனர். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X