அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

Added : ஆக 14, 2021
Share
திருவள்ளூர்: மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி, 100 சதவீதம் கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் பிற வாரியத்தில் இணைப்பு பெற்ற பள்ளிகளில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுரைகளை மீறி கல்வி கட்டணம்

திருவள்ளூர்: மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி, 100 சதவீதம் கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் பிற வாரியத்தில் இணைப்பு பெற்ற பள்ளிகளில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுரைகளை மீறி கல்வி கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது.இதை மீறி 2021 - 22ம் கல்வியாண்டில், 100 சதவீதம் கல்வி கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகார்களை matricfeecomplaintceotlr@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 2019 - 20 கல்வியாண்டில் நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக் கட்டணத்தில், 85 சதவீத கட்டணத்தை 2021 - -22 கல்வியாண்டில் 6 தவணையாக பெற்றோர் செலுத்தலாம். கடைசி தவணை, 2022, பிப்ரவரி, 1ம் தேதிக்கு முன் செலுத்தலாம்பள்ளிக்கல்வி ஆணையர் ஆணை மீறி மாணவர்களிடம் 85 சதவீதம் கட்டணத்திற்கு மேல் கல்வி கட்டணம் செலுத்தக் கோரி எவ்விதமான நிர்பந்தம் செய்யக்கூடாது.இவற்றை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X