காங்கோவில் இந்தியர்கள் மீது வன்முறை கட்டவிழ்ப்பு

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கின்ஷாசா:இந்தியாவில் காங்கோமாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து காங்கோவில் இந்திய நிறுவனங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது.இந்தியாவில் தங்கி இருக்கும் தங்கள் குடிமக்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடத்தப் படுவதாக கடந்த காலங்களில் ஆப்ரிக்க நாடுகளின் துாதர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.கடந்த 2016ல்ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசை சேர்ந்த ஒருவர்

கின்ஷாசா:இந்தியாவில் காங்கோமாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து காங்கோவில் இந்திய நிறுவனங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கி இருக்கும் தங்கள் குடிமக்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடத்தப் படுவதாக கடந்த காலங்களில் ஆப்ரிக்க நாடுகளின் துாதர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.கடந்த 2016ல்ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசை சேர்ந்த ஒருவர் டில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த புகார்கள் அதிகரித்தன.

இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவின் பெங்களூரில் காங்கோ நாட்டை சேர்ந்த ஜோயல் மாலு என்ற மாணவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிர்இழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப் பட்டு உள்ளன. இந்திய வம்சாவளிகள் நடத்தும் தொழில் நிறுவனங்களை மர்ம கும்பல் சூறையாடி உள்ளது.இந்தியர்களின் கடைகளில் புகுந்து அங்கிருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் இந்திய வம்சாவளிக்கு சொந்தமான கார் ஒன்றை தீ வைத்து எரித்தனர். வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இந்த வன்முறைகளில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மூன்று பேரை காங்கோ போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
14-ஆக-202111:29:49 IST Report Abuse
W W ஒரு சிலர் போதை பொருள் கடத்தல், சில சில்மிஷந்களில் இடுபடுவது உண்டு அவர்களை பார்த்து கை காரீயம் செயவேண்டும்.ஒரு சில வர்கங்களை கொண்டு வெளினாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பது இப்பொது கூடிகொண்டே வருகிறது, என்பது வருந்த தக்கது அதனல் அவர்களுக்கு பாதுகப்பு குறித்து நம் மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
14-ஆக-202110:40:39 IST Report Abuse
srinivasan Never heard of arson against Chinese nationals in Africa
Rate this:
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
14-ஆக-202109:44:40 IST Report Abuse
Yes your honor இது குள்ளநரிப் பயல் சீனாகாரனின் சித்து விளையாட்டாக இருக்கலாம்...உலக நாடுகளை மெது மெதுவாக இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிடும் ஓர் அயோக்யத் தனமான பிராஜக்டாக இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X