சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோயில் கோபுரம் இடிப்பை கண்டித்து மறியல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வந்தவாசி:வந்தவாசி அருகே, தவளகிரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள, விநாயகர் கோயில் கலச கோபுரம் மர்ம நபர்களால், சேதப்படுத்தியதை கண்டித்து இந்து அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையில் 1400 அடி உயரமுள்ள தவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், விநாயகர் சன்னதியில் உள்ள கலச கோபுரம், மர்ம நபர்களால் நேற்று சேதப்படுத்தப்

வந்தவாசி:வந்தவாசி அருகே, தவளகிரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள, விநாயகர் கோயில் கலச கோபுரம் மர்ம நபர்களால், சேதப்படுத்தியதை கண்டித்து இந்து அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையில் 1400 அடி உயரமுள்ள தவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், விநாயகர் சன்னதியில் உள்ள கலச கோபுரம், மர்ம நபர்களால் நேற்று சேதப்படுத்தப் பட்டிருந்தது.ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மலை அடிவாரத்தில் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம், டி.எஸ்.பி., விஸ்வேஸ்வரய்யா சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X