பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல! : பட்ஜெட்டில் அறிவிப்பு

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
'மின் வாரியத்தின் நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.மின் வாரியத்திற்கான அறிவிப்புகள்: ஏறத்தாழ 2,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது. மின் வாரியம் சந்திக்கும் பெரும்

'மின் வாரியத்தின் நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsமின் வாரியத்திற்கான அறிவிப்புகள்:

 ஏறத்தாழ 2,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது. மின் வாரியம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள், முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன

 சென்னை - கன்னியாகுமரி தொழில் பெரு வழித்தடம், மின் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கை மீது, அரசு விரைந்து செயல்பட்டு, மின் வாரிய நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்

 அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில், 17 ஆயிரத்து, 980 மெகா வாட் மொத்த மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும்


latest tamil news
 விவசாயத்திற்கான இலவச மின்சாரம்; வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும், 19 ஆயிரத்து 873 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
14-ஆக-202122:26:09 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் டுமீலுநாடு மின்மிகை மாநிலம் அல்ல யப்பா யப்பா அணிலே துணை இதை கண்டு பிடிக்கத்தான் டுமீலன்ஸ் பத்து வருஷம் கழிஞ்சு திரும்ப வாய்ப்பு கொடுத்திருக்கானுங்க முடியல இப்பவே கண்ணைக்கட்டுதே டுமீலுநாடு மின்மிகை மாநிலம் அல்ல ஹையோ ஹையோ
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
14-ஆக-202121:16:14 IST Report Abuse
W W மின் உற்பத்தியை பெருக்க அதிக மின் நிலயங்கள் நிறுவ மத்திய அரசை கேட்டுகொள்ள வேண்டும். அப்படியே நீங்களே கட்டுமானம் செய்வதக இருந்தால் உள்ளுர் நிருவனங்களில் (BHEL) முலம் மட்டுமே காண்டிரட் கொடுக்கப்பட வேண்டும். சீனா நிருவனங்களில் முலம் அமைக்கபட வேண்டாம்(May be Cheap not Long Last Lot of Maitenance Problem Spares parts may not be cheaper)) என்பது என் தாழ்மையான கருத்து. பவர் கட் என்பதே அறியவண்னம் மாற வேண்டும்.நாம் ஒரு மின் உற்பத்திக்கு முதல் மானிலமக மாற வேனண்டும்.(By export We may get more Income out of it,we can close Tas mark even)
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
14-ஆக-202115:48:32 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மின்சாரம் பற்றி முதலைச்சர் நிதி அமைச்சர் இருவருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நீர் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் விவசாயம் செய்தே ஆக வேண்டும் நீர் உள்ள இடத்தில கொஞ்சம் அதிக மகசூல் வரலாம். நீர் குறைவான இடத்தில தென்னை மரங்கள் வளர்க்க வேண்டிவரும். மக்களுக்கு நெல்லும் தேவை தேங்காய், தேங்காய் எண்ணெய்கள் தேவை. நீர் உள்ள இடத்தில நெல்லுக்கு தண்ணீர் அதிகம் கிடைக்கிறது மின்சார தேவை குறைவு நீர் குறைவாக உள்ள இடத்தில தென்னை மரத்திக்கு தண்ணீர் எடுக்க மின்சாரம் தேவை படுகிறது. இலவச மின்சாரம் கூடாது என்றால் தென்னை மரம் அழிந்து விடும். இதை முதலைச்சர் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் தென்னை மரம் இந்திய நாட்டில் தமிழ் நாடு கேரளா மாநிலத்தில் அதிகம் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X