'மின் வாரியத்தின் நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்கும்' என, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியத்திற்கான அறிவிப்புகள்:
ஏறத்தாழ 2,500 மெகா வாட் மின்சாரத்தை, மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது. மின் வாரியம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள், முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன
சென்னை - கன்னியாகுமரி தொழில் பெரு வழித்தடம், மின் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களின் நிதி மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கை மீது, அரசு விரைந்து செயல்பட்டு, மின் வாரிய நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்
அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில், 17 ஆயிரத்து, 980 மெகா வாட் மொத்த மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும்

விவசாயத்திற்கான இலவச மின்சாரம்; வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும், 19 ஆயிரத்து 873 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE