சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காஸ்' லாரி கவிழ்ந்து விபத்து

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சோழவரம்: சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு முனையம் உள்ளது.இங்கிருந்து 18 டன் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, நேற்று பகல், 1:00 மணிக்கு புறப்பட்டு, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பாட்டலிங் பாயின்ட்
 'காஸ்' லாரி கவிழ்ந்து விபத்து

சோழவரம்: சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு முனையம் உள்ளது.இங்கிருந்து 18 டன் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, நேற்று பகல், 1:00 மணிக்கு புறப்பட்டு, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பாட்டலிங் பாயின்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.மீஞ்சூர் - -வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக சென்ற லாரி, சோழவரம் டோல்கேட் அருகே, சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை அடைவதற்கு, வளைவில் திரும்பும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

பின், அங்குள்ள சர்வீஸ் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.லாரி ஓட்டுனர் சிவகுமார், லேசான காயங்களுடன் தப்பினார். தகவலறிந்த சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்தனர்.நான்கு ராட்சத கிரேன்கள் வைத்து, இரும்பு 'ரோப்' மூலம் லாரியை கட்டி, பாதுகாப்பாக மீட்கும் பணியில்ஈடுபட்டனர்.

மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், மாலை 5:00 மணிக்கு எரிவாயு டேங்கர் லாரி பாதுகாப்பாக மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X