பொது செய்தி

இந்தியா

ஆபாச 'வீடியோ' வழக்கில் எஸ்.ஐ.டி.,க்கு கிடுக்கிப்பிடி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பெங்களூரு: 'முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி வீடியோ வழக்கில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவின் தலைவர் இல்லாமல், விசாரணை நடந்தது எப்படி?' என கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.பா.ஜ., அரசில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, 61, இளம்பெண் ஒருவருடன், நெருக்கமாக இருந்த, 'வீடியோ' சில மாதங்களுக்கு முன் வெளியானது. அது தேசிய அளவில் பெரும்

பெங்களூரு: 'முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி வீடியோ வழக்கில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவின் தலைவர் இல்லாமல், விசாரணை நடந்தது எப்படி?' என கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பா.ஜ., அரசில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, 61, இளம்பெண் ஒருவருடன், நெருக்கமாக இருந்த, 'வீடியோ' சில மாதங்களுக்கு முன் வெளியானது. அது தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிபோனது.வீடியோ வெளிச்சத்துக்கு வந்த பின், ரமேஷ் ஜார்கிஹோளியும், அந்த, 26 வயது இளம்பெண்ணும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம், போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.

ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த மாநில அரசு, ஐ.பி.எஸ்., அதிகாரி சவுமேந்து முகர்ஜி தலைமையில், எஸ்.ஐ.டி., அமைத்துள்ளது.இவ்வழக்கு தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், விசாரணை நடக்கிறது. சவுமேந்து முகர்ஜி, பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், உடல் நிலையை காரணம் காண்பித்து, விடுமுறையில் சென்ற அவர் சமீபத்தில் பணிக்கு ஆஜரானார்.

இதற்கிடையில், விசாரணையை முடித்த அதிகாரிகள், உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, 'எஸ்.ஐ.டி., தலைவர் நீண்ட விடுமுறையில் இருந்தார். அவர் இல்லாமல், அதிகாரிகள் விசாரணையை நடத்தியது எப்படி?' என, உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X