புவிசார் குறியீடு பொருட்களுக்கான சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை-தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற, மூன்று பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது.'இந்தியா - 75' திட்டத்தை நினைவு கூரும் விதமாகவும், 'ஆத்மநிர்பர் பாரத்' அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழக அஞ்சல் துறை சார்பில், புவிசார் குறியீடு பெற்ற மூன்று பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா, சென்னை, அண்ணா சாலை

சென்னை-தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற, மூன்று பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது.

'இந்தியா - 75' திட்டத்தை நினைவு கூரும் விதமாகவும், 'ஆத்மநிர்பர் பாரத்' அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழக அஞ்சல் துறை சார்பில், புவிசார் குறியீடு பெற்ற மூன்று பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா, சென்னை, அண்ணா சாலை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ள அஞ்சல் உறையை வெளியிட்டு, தமிழக அஞ்சல்துறைத் தலைவர் செல்வகுமார் பேசியதாவது:இந்திய அஞ்சல் துறை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், அஞ்சல் உறைகளை வெளியிட்டு வருகிறது.



latest tamil news




இந்திய அளவில் பல பிரிவுகளை சார்ந்த 365 பொருட்களுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் முதல் புவிசார் குறியீடு பெற்றது, டார்ஜிலிங் தேயிலை தான். இதுவரை கர்நாடகா 47 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று முதலிடத்திலும், 39 பொருட்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.இந்த குறியீடு வாயிலாக,அந்த பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கிறது. அஞ்சல் துறை சார்பில்26 பொருட்களுக்கு, மண்டலம் வாரியாக அஞ்சல் உறைகள் வெளியிடப்பட உள்ளன.இதுவரை காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட நான்கு பொருட்களுக்கு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் ஒன்பது பொருட்களுக்கான அஞ்சல் உறை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்


latest tamil news



.இதையடுத்து, மண்டல அஞ்சல் துறை தலைவர் வீணா ஆர்.ஸ்ரீனிவாஸ், நாகர்கோவில் நகைகள் குறித்த அஞ்சல் உறையையும், அஞ்சல் துறை கணக்கு மற்றும் நிதி பொது மேலாளர் அனிதா மகாதாஸ், மதுரை சுங்குடி சேலைக்கான அஞ்சல் உறையையும் வெளியிட்டனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'அக்கார்டு' குழும தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் பட் அஞ்சல் உறைகளை பெற்று பேசினார்.விழாவில், புவிசார் குறியீடுக்கான தொடர்பு அதிகாரி சஞ்சய் காந்தி, அஞ்சல் துறை தலைமையக இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202109:04:27 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் மஞ்சள், வேப்பிலைக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X