மாச்சோனஹள்ளியில் ட்ரீ பார்க் இறுதிகட்டத்தில் பூங்கா பணிகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாச்சோனஹள்ளியில் 'ட்ரீ பார்க்' இறுதிகட்டத்தில் பூங்கா பணிகள்

Added : ஆக 14, 2021
Share
பெங்களூரு: ஹெசரகட்டாவின், மாச்சோனஹள்ளியில் வனத்துறை புதிதாக அமைக்கும், 'ட்ரீ பார்க்' பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'பெங்களூரு மிஷன் - 2020' திட்டத்தின் கீழ், ஹெசரகட்டாவின், மாச்சோனஹள்ளியில், 98 ஏக்கரில் 1.8 கோடி ரூபாய் செலவில், 'ட்ரீ பார்க்' அமைக்கப்படுகிறது. 90

பெங்களூரு: ஹெசரகட்டாவின், மாச்சோனஹள்ளியில் வனத்துறை புதிதாக அமைக்கும், 'ட்ரீ பார்க்' பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'பெங்களூரு மிஷன் - 2020' திட்டத்தின் கீழ், ஹெசரகட்டாவின், மாச்சோனஹள்ளியில், 98 ஏக்கரில் 1.8 கோடி ரூபாய் செலவில், 'ட்ரீ பார்க்' அமைக்கப்படுகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு, திறந்து விடப்படும்.நுாறு ஆண்டுகள் பழமையான கப்பன் பூங்கா, லால்பாக் பூங்காக்கள் அமைக்கப்பட்ட போது, மக்கள் தொகை குறைவாக இருந்தது.

தற்போது பெங்களூரு நகர் பெரிய அளவில் வளர்ந்துள்ளது; மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புறநகரில் வசிக்கும் மக்கள் தினமும் நடைபயிற்சிக்காக, மத்திய பகுதிகளில் உள்ள பூங்காக்களுக்கு செல்ல முடியாது. எனவே புறநகர் பகுதிகளில், பூங்காக்கள் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, புறநகரின் வனப்பகுதிகளில், பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு எந்த மரங்களும் வெட்டப்படாமல், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மாச்சோனஹள்ளியில் தற்போது அமைக்கப்படும் மரப்பூங்காவில் நடைபயிற்சி செய்ய பாதை, குழந்தைகளுக்காக 30க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் கொண்ட விளையாட்டு வளாகம், திறந்த வெளி உடற் பயிற்சி மையம்.மேலும், ராசி வனம், நவகிரக வனம், நட்சத்திர வனம், மருத்துவ குணம் கொண்ட மரச்செடிகள், பொதுமக்கள் அமர இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உட்பட, அனைத்து வசதிகளும் இருக்கும். வனப்பகுதியிலிருந்து பாம்புகள், பூங்காவுக்குள் நுழையாமல், பூங்காவை சுற்றிலும் நாகராளே செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X