பொது செய்தி

இந்தியா

சிவாவுக்கும், சித்துக்கும் வேண்டாதவரா ஜமிர்?

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பெங்களூரு: அமலாக்கத் துறையின் சோதனைக்கு ஆளான, காங்., - எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான், மாநில தலைவர் சிவகுமாருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும் வேண்டாதவராக மாறி விட்டார்.கர்நாடக காங்கிரசில் எதுவும் சரியில்லை என்பது, அவ்வப்போது நிரூபணமாகிறது. கோஷ்டி பூசல் தலை விரித்தாடுகிறது. சித்தராமையா கோஷ்டியுடன் அடையாளம் காணப்பட்டவர், சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ., ஜமிர் அகமது

பெங்களூரு: அமலாக்கத் துறையின் சோதனைக்கு ஆளான, காங்., - எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான், மாநில தலைவர் சிவகுமாருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும் வேண்டாதவராக மாறி விட்டார்.கர்நாடக காங்கிரசில் எதுவும் சரியில்லை என்பது, அவ்வப்போது நிரூபணமாகிறது.

கோஷ்டி பூசல் தலை விரித்தாடுகிறது. சித்தராமையா கோஷ்டியுடன் அடையாளம் காணப்பட்டவர், சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான். 'அடுத்த முதல்வர் சித்தராமையா' என்ற விவாதத்தை துவங்கியதும் இவர் தான். சித்தராமையாவுக்காக தன் தொகுதியை விட்டுத் தரவும் அவர் தயாராக இருந்தார்.

'தொகுதியில் சித்தராமையா, வேட்பு மனு தாக்கல் செய்தால் போதும்; அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வது என் பொறுப்பு' என, ஜமிர் சவால் விடுத்தார்.சித்தராமையா பெங்களூரில் இருந்தால், அவரை தினமும் ஜமிர் சந்திப்பார்.ஆனால் ஜமிர் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பின், அவரை ஒரு முறை கூட சித்தராமையாவை சந்திக்கவில்லை. 'வீடு கட்டிய விஷயம் என்றால், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்க வேண்டும்.

அமலாக்கத்துறையினர் ஏன் சோதனையிட்டனர்' என ஜமிரிடம், சித்தராமையா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.ஜமிர் வீட்டில் நடந்த சோதனையை கண்டித்து, அவரது விசுவாசிகள் போராட்டம் நடத்தினரே தவிர, காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சித்தராமையாவே அடுத்த முதல்வர் என கூறியதன் மூலம், ஜமிர் காங்கிரசில் பலரின் கோபத்துக்கு இலக்காகியுள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் மாநில பொறுப்பாளரும் எச்சரித்துள்ளார்.ஜமிரை சிவகுமார் விலக்கியே வைத்திருந்தார். அமலாக்கத்துறை சோதனைக்கு பின், சித்தராமையாவும் கூட, ஜமிரிடமிருந்து இடைவெளியை தக்க வைத்துக் கொள்கிறார். இரண்டு தலைவர்களுக்கும், இவர் வேண்டாதவராகியதாகி விட்டதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X