தடுப்பூசி போட்ட முதியோர் எண்ணிக்கையில் குழப்பம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட்ட முதியோர் எண்ணிக்கையில் குழப்பம்

Added : ஆக 14, 2021
Share
பெங்களூரு: கொரோனா தடுப்பூசி போட வேண்டிய முதியயோர் எண்ணிக்கை என மாநில அரசு அறிவித்த இலக்கு, தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் மாறுபட்டு வருவதால் தகவல் ஒருங்கிணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட துவங்கியதும், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட,

பெங்களூரு: கொரோனா தடுப்பூசி போட வேண்டிய முதியயோர் எண்ணிக்கை என மாநில அரசு அறிவித்த இலக்கு, தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் மாறுபட்டு வருவதால் தகவல் ஒருங்கிணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட துவங்கியதும், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட, தடுப்பூசி போட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக காட்டுவதால், தொழில்நுட்ப கோளாறா அல்லது தவறான கணக்கெடுப்பா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.முதியவர்களின் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் 54 லட்சத்து, 87 ஆயிரத்து, 399 பேர் உள்ளனர்.ஆனால், 'கோவின்' இணையதளத்தில் உள்ள பதிவில், ஆக.,11 வரை 78லட்சத்து, 54 ஆயிரத்து, 941முதியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி போட வேண்டிய முதியவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இல்லை.மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2011ல் எடுத்த கணக்கெடுப்பு என்பதால், பலரும் வயது மாறியிருக்க வாய்ப்புள்ளது.

மேலும், இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கையும் வேறுபடும். குடகு மாவட்டத்தில் 5 லட்சம் மக்கள்தொகையில், 50 ஆயிரம் முதியவர்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் உள்ளது.ஆனால், ஏற்கனவே, 60ஆயிரம் முதியவர்கள் தடுப்பூசி போட்டு விட்டதாக தற்போதைய தகவல் பதிவேட்டில் உள்ளது. இந்த விபரங்கள் மாறுபடுவதால், வாக்காளர் பட்டியல் வைத்து சரிபார்ப்பதோடு, வீடுதோறும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி சரியான எண்ணிக்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X