ஒரு வீட்டுக்கு 4 - 5 கார் கூடாது; மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
மும்பை-'அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வைத்திருப்பவர் 4 - 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல், பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதிய இட

மும்பை-'அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வைத்திருப்பவர் 4 - 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல், பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதிய இட வசதிமேலும், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் வாகனங்களை நிறுத்த இடப் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்கள், கார் நிறுத்தும் இடத்தை குறைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் அறிவிக்கையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நவி மும்பையை சேர்ந்த சந்தீப் தாக்குர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அதில், 'புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி அளிக்கப்படுவதில்லை. எனவே அங்கு வசிப்பவர்கள் குடியிருப்புக்கு வெளியே சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்' என, குறிப்பிட்டு உள்ளார்.


latest tamil news


இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:புதிய கார்கள் வாங்குவது குறைக்கப்பட வேண்டும். வாகன நிறுத்த வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு குடும்பத்தினர் 4 - 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. பெரிய குழப்பம்பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக வாகனங்களை வாங்கி குவிக்கக் கூடாது. வாகன நிறுத்துமிடம் குறித்து முறையான கொள்கை வகுக்கப்படவில்லை எனில், எதிர்காலத்தில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த மனு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

adv id
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஆக-202114:13:49 IST Report Abuse
அசோக்ராஜ் ஜட்ஜி அவன் மக்கள் வரிப்பணத்தில் அனுபவிக்கிற மாதிரி எல்லா குடிமகனுக்கும் கார், டிரைவர், செக்யூரிட்டி, பங்களா என்று கொடுக்க உத்தரவு போட்டுட்டு அதுக்கப்புறம் உபதேசம் செய்யலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஆக-202111:47:31 IST Report Abuse
Ramesh Sargam சரியான ஒரு அதிரடி முடிவு. நாடு பூராவும் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். In India the government as well as policy makers are always late in taking decisions. Single flat owner owning two many vehicles and those who have independent houses but not providing parking places for their vehicles should not be allowed to own any vehicles. Some governments sometime back introduced rules giving warning to those vehicle owners that they should not park their vehicles in front of their houses or flats on the streets thereby causing traffic inconvenience. That rule went in the air. Now at least the police need to wake up and tow vehicles parked in front of houses and teach a lesson to too many vehicle owners - strictly.
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
14-ஆக-202111:18:50 IST Report Abuse
Believe in one and only God இது போல் ஒரு குடும்பத்துக்கு 2 வீடுகளுக்கு மேல் இருக்க கூடாது என்கிற சட்டம் வர வேண்டும். தைவானில் இந்த சட்டம்உள்ளது. மும்பையில், குஜராத்திகள் அவர்கள் இருக்கும் பகுதிகளில் nonveg சாப்பிடுபவர்களை அனுமதிப்பதில்லை. வீடு சொந்தக்காரர்கள் தர விருப்ப பட்டாலும், Noc கிடைக்காது வீடு வாடகை ஒரு லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏஜெண்டுகள் வாடகையை கூட்டி வைத்து விட்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X