பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த பாஜக முடிவு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மைசூரு,: பா.ஜ.,வை பலப்படுத்தும் நோக்கில், தலித் சமுதாயங்களின் ஆதரவை பெற, கர்நாடகாவின் எஸ்.சி., ஒதுக்கீடு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்சியின் எஸ்.சி., பிரிவு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பா.ஜ., - எஸ்.சி., பிரிவு தலைவர் சலவாதி நாராயணசாமி, மைசூரில் நேற்று கூறியதாவது:வரும் 2023 சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளை கைப்பற்றும் வகையில், கட்சியை பலப்படுத்துவோம். இதற்காக எஸ்.சி.,

மைசூரு,: பா.ஜ.,வை பலப்படுத்தும் நோக்கில், தலித் சமுதாயங்களின் ஆதரவை பெற, கர்நாடகாவின் எஸ்.சி., ஒதுக்கீடு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்சியின் எஸ்.சி., பிரிவு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ., - எஸ்.சி., பிரிவு தலைவர் சலவாதி நாராயணசாமி, மைசூரில் நேற்று கூறியதாவது:வரும் 2023 சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளை கைப்பற்றும் வகையில், கட்சியை பலப்படுத்துவோம். இதற்காக எஸ்.சி., ஒதுக்கீடு தொகுதிகளில், சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெற்று, நிலையானஅரசை அமைக்கும். தலித்துகளை ஓட்டு வங்கியாக, காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

ஆனால் இச்சமுதாயத்தின் யாரையும், மாநில முதல்வராக்காமல், மோசடி செய்தது. ஒரு காலத்தில், பசவலிங்கப்பா முதல்வராகி இருக்க வேண்டும். ஆனால் வீரப்ப மொய்லி முதல்வராக்கப்பட்டார். மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வருக்கும், இதே சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் பா.ஜ., அனைத்து சமுதாயங்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலித் சமுதாயத்தின் ஆதரவை கோருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X