கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரண விசாரணை 90 சதவீதம் நிறைவு: ஆறுமுகசாமி கமிஷன் தகவல்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை-ஜெயலலிதாமரணம் குறித்து, 90 சதவீத விசாரணையை முடித்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்து உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017ல் கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம், தொடர்ந்து

சென்னை-ஜெயலலிதாமரணம் குறித்து, 90 சதவீத விசாரணையை முடித்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்து உள்ளது.



latest tamil news


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017ல் கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இதுவரை, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், கமிஷனை முடிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர்தொண்டன் சுப்பிரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 11வது முறையாக, ஆறு மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.கமிஷன் தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ''90 சதவீத விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டது. 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


latest tamil news


அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், 2019 ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.''இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், வரும் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது,'' என, தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-ஆக-202115:50:46 IST Report Abuse
bal அவங்களே மறுஜென்மம் எடுத்து வளர்ந்திருப்பர்...அனால் இந்த வழக்குகள் கோர்ட்டில் நூறாண்டுகள் நடக்கும்
Rate this:
Cancel
14-ஆக-202115:04:14 IST Report Abuse
மதுமிதா நான் என் சொந்த காசட் கடைமூலம் தான் சொத்துக்கள் சேர்த்தேன் கார்கள் அம்மா அவர்கள் என் நேர்மையை பாராட்டி நட்பை பாராட்டி தந்தவை மீதி 10 பர்ஸன்ட் பதிலாக வரலாம். வாய்மையே வெல்ல வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202114:14:42 IST Report Abuse
vpurushothaman பன்னிரண்டாவது முறையும் நீட்டிப்பார்கள். தங்களுக்குச் சாதகமாக அறிக்கை வேண்டுமே. அதிர்ஷ்டக் காற்று ஆறுமுகசாமி பக்கம் அடிக்குது சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X