பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று சோதனைக்கு முன்பதிவு விமான நிலையத்தில் அறிமுகம்..

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியருக்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்.இதற்காக விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்தாண்டு ஜூலை வரை, 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள்

சென்னை-சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியருக்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்.



latest tamil news



இதற்காக விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்தாண்டு ஜூலை வரை, 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதனால், பயணியர் எண்ணிக்கை உயர்ந்து, கொரோனா பரிசோதனை மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரவும் நீண்ட நேரமானது.


latest tamil news


இதைத் தவிர்க்க, ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர்., முறை, இம்மாதம் 5ம் தேதி அறிமுகமானது. இந்த சோதனையில் 30 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது, பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தின் டுவிட்டர் பக்தத்தில், அதற்கான, க்யூ.ஆர்., கோடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்பதிவு செய்யும் பயணியருக்கு நேரம் ஒதுக்கப்படும். உரிய நேரத்தில் அவர்கள் வந்து உடனடியாக சோதனையை மேற்கொள்ளலாம். இதனால், கொரோனா பரிசோதனைக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஆக-202111:38:18 IST Report Abuse
Ramesh Sargam நல்லது. இதுபோன்று இந்தியாவின் மற்ற விமான நிலையங்களிலும், ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் செய்தால் பயனியர்களுக்கு எந்தவித ஒரு பிரச்சினையும் இருக்காது. உடனே ஏட்பாடு செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X