பொது செய்தி

தமிழ்நாடு

தரைத்தளத்துக்கு மாறுமா இ.எஸ்.ஐ, மருந்தகம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பல்லடம் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்பட்டு வருகிறது. மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மூவர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் பலர், மருந்து, மாத்திரைகள் வாங்க தினமும் செல்கின்றனர்.முதல் தளத்தில் மருந்தகம் உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் பலரும் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் கூறுகையில்,
 தரைத்தளத்துக்கு மாறுமா இ.எஸ்.ஐ, மருந்தகம்

பல்லடம் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்பட்டு வருகிறது. மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மூவர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் பலர், மருந்து, மாத்திரைகள் வாங்க தினமும் செல்கின்றனர்.முதல் தளத்தில் மருந்தகம் உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் பலரும் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மருந்தகம் மாடியில் இருப்பதாலும், சாய்வுதள பாதை இல்லாததாலும், மாற்றுத்திறனாளிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலே செல்ல இயலாமல், அருகிலுள்ள பொதுமக்கள் உதவியுடன் மருந்து, மாத்திரைகள் வாங்கும் நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்லடம் இ.எஸ்.ஐ., மருந்தகத்தை, பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் பகுதியில், தரை தளத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X