இந்தியா

புதுச்சேரி சட்டசபை 26ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை வரும் 26ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகிறது.இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:புதுச்சேரியின், 15வது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. கவர்னர் தமிழிசை உரையாற்றி துவக்கி வைக்கிறார்.அன்று மாலை, துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து, சட்டசபை அலுவலர் ஆய்வுக்குழு

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை வரும் 26ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகிறது.

இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:புதுச்சேரியின், 15வது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. கவர்னர் தமிழிசை உரையாற்றி துவக்கி வைக்கிறார்.அன்று மாலை, துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து, சட்டசபை அலுவலர் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில், சட்டசபை எத்தனை நாள் நடத்துவது, பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இந்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்திட 10 ஆயிரத்து 100 கோடிக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி உள்ளோம். வரும் 23ம் தேதி நானும், முதல்வரும் டில்லி சென்று, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சரை சந்தித்து பட்ஜெட் தொடர்பான கோப்பிற்கு அனுமதி பெற உள்ளோம்.மேலும், புதுச்சேரயில், மூடப்பட்டுள்ள சுதேசி, பாரதி உள்ளிட்ட ஆலைகளை தனியார் பங்களிப்புடன் இயக்கி, வேலை வாய்ப்பை உருவாக்கிட ரூ. 500 கோடி மானியம் கேட்டுள்ளோம்.

அதேபோன்று அரியூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கிட ரூ.100 கோடி நிதி கோரினோம். மத்திய அரசு 34 கோடி வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள ரூ.66 கோடியையும் பெற்றிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.புதுச்சேரியில் புதிய சட்டசபைக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி அடிக்கல் நாட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிடோரை அழைக்க உள்ளோம்,இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அசோக்பாபு எம்.எல்.ஏ., சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X