இந்தியா

உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு விபரம் 

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வார்டுகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.வார்டுகள் ஒதுக்கீடு விபரம்:புதுச்சேரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டு கள். இதில் பொது பெண்கள் -9, எஸ்.சி.,- 2, எஸ்.சி.

புதுச்சேரி : புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வார்டுகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வார்டுகள் ஒதுக்கீடு விபரம்:புதுச்சேரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டு கள். இதில் பொது பெண்கள் -9, எஸ்.சி.,- 2, எஸ்.சி. பெண்கள்-2 மீதம் 20 வார்டுகள் உள்ளது.இதில், 11 வார்டுகள் வைத்திக்குப்பம், திருவள்ளுவர் நகர், குருசுக் குப்பம், ராஜ்பவன், இளங்கோ நகர், சக்தி நகர், நெல்லித்தோப்பு, நேதாஜி நகர், பாரதிதாசன் நகர், நைனார்மண்டபம், முத்தியால்பேட்டை கிழக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 9 வார்டு பொது வார்டுகளாக மாற்றப்பட்டது.

உழவர்கரை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள்; பொது பெண்கள் -12, எஸ்.சி.-2, எஸ்.சி. பெண்கள் -2. மீதமுள்ள 26 வார்டுகளில், பிள்ளைச்சாவடி, நாவற்குளம், லாஸ்பேட்டை, காமராஜ் நகர், சாரம், வினோபாநகர், அசோக் நகர், குமரன் நகர், திலாஸ் பேட்டை, கதிர்காமம், வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், அரும்பார்த்தபுரம், ஜவகர் நகர் ஆகிய 14 வார்டுகள் பிற்படுத்தப்பட்டோருக்கும், மீதமுள்ள 12 பொது வார்டுகளாக அறிவிக்கப் பட்டது.

காரைக்கால் நகராட்சியில் மொத்தம் 17 வார்டுகள்: பொது பெண்கள் -5; எஸ்.சி.-1, எஸ்.சி. பெண்கள் -1. மீதமுள்ள 10 வார்டுகளில், தலத்தெரு, ஒப்பில்லாமணியர் கோவில், வலத்தெரு, அம்மையார் கோவில், அந்தோனியார் கோவில், தருமபுரம் ஆகிய வார்டுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதுபோல் மாகி மற்றும் ஏனாம் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து உள்ள மொத்த வார்டுகளில், பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.மொத்தமுள்ள 5 நகராட்சிகளில் ஒரு வார்டு எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். எஸ்.டி. பிரிவினர் அதிகம் வசிக்கும் வார்டு கண்டறியப்பட்டு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X