தமிழ்நாடு

தடுப்பணை கட்டும் திட்டம்: வெகு சிறப்பு! சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு!

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், புதிதாக தடுப்பணைகள் கட்டுவதை, இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரம், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினரிடம் ஆலோசித்து, தேவையான இடங்களை தேர்வு செய்து, கட்டுமான பணி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.தமிழக அரசின் திருத்திய நிதி நிலை அறிக்கை (2021-22), சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுற்றுச்சூழலை
  தடுப்பணை கட்டும் திட்டம்: வெகு சிறப்பு! சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு!

கோவை:தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், புதிதாக தடுப்பணைகள் கட்டுவதை, இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

அதே நேரம், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினரிடம் ஆலோசித்து, தேவையான இடங்களை தேர்வு செய்து, கட்டுமான பணி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.தமிழக அரசின் திருத்திய நிதி நிலை அறிக்கை (2021-22), சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, குளங்களை துார்வாருவது, தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்கள், இத்திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு - கவுசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் செல்வராஜ்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், விடுபட்ட பகுதிகளை இணைத்து, 2வது திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். குளங்களை துார்வாரும் திட்டம் வரவேற்கத்தக்கது. வண்டல் மண்ணை விவசாயிகளே, டிராக்டர்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, குளங்களுக்குள் செறிவூட்டும் கிணறு ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது; அதன் செயல்பாட்டை விளக்க வேண்டும்.கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்: ரூ.500 கோடியில் பருவ நிலை மாற்ற மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வல்லுனர் குழு அமைக்க வேண்டும். பசுமை பரப்பு, 33 சதவீதமாக அதிகரிக்க, வனத்துறை மற்றும் வேளாண் பல்கலை ஆராய்ச்சி துறையினர், எவ்வகையான மரக்கன்றுகள் நட வேண்டும் என ஆலோசனை வழங்க வேண்டும். அணைக்கட்டுகள், கதவணைகள் உருவாக்குவதாக அறிவித்திருப்பது, வரவேற்கத்தக்கது.முன்னதாக, எந்தெந்த இடத்தில் தேவை என்பதை, அப்பகுதி விவசாயிகளிடம் ஆலோசித்து, தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு ஈர நிலம் இயக்கம் அமைக்கும்போது, மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.

'ராக்' அமைப்பு செயலாளர் ரவீந்திரன்: தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்குவது மிகப்பெரியது. அதன் கீழ் முக்கியமான குளங்களை கொண்டு வந்து, பாதுகாக்கலாம். புதிதாக தடுப்பணை கட்டுவது வரவேற்கத்தக்கது. அதற்கு முன், சிதிலமடைந்து காணப்படும் தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். நொய்யல் நீர் வழித்தடத்தில் எந்தெந்த இடத்தில் புதிதாக கட்ட வேண்டுமென, வரைபடத்துடன் இடம் தேர்வு செய்துள்ளனர். அப்பகுதியில் கட்டினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X