பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டரின் 'பேஸ்புக்' பக்கத்தில் சுதந்திர தின விழா நேரடி ஒளிபரப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சி, கலெக்டரின் 'பேஸ்புக்' பக்கத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை வ.உ.சி., மைதானத்தில், நாளை (15ம் தேதி) காலை, 9:05 மணிக்கு நடக்கும் விழாவில், கலெக்டர் சமீரன், தேசியக்கொடி ஏற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில்,

கோவை:கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சி, கலெக்டரின் 'பேஸ்புக்' பக்கத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை வ.உ.சி., மைதானத்தில், நாளை (15ம் தேதி) காலை, 9:05 மணிக்கு நடக்கும் விழாவில், கலெக்டர் சமீரன், தேசியக்கொடி ஏற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில், சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், டாக்டர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்குகிறார்.கொரோனா தொற்றால் நிலவும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கவுரவிக்கும் வகையில், அவரவர் வீட்டுக்கு, தாசில்தார் அல்லது துணை தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் நேரில் சென்று, பொன்னாடை அணிவித்து, கவுரவிக்க உள்ளனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், கோவை கலெக்டரின் முகநுால் (பேஸ்புக்) பக்கத்தில், வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதனால், கோவை மக்கள் வீட்டில் இருந்தே நிகழ்ச்சியை பார்க்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X