இந்தியா

மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; கவர்னர் தமிழிசை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம்' என, கவர்னர் தமிழிசை பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு, புதுச்சேரி கிளை சார்பில், 75-வது ஆண்டில் சுதந்திர இந்தியா - புதுச்சேரி சிறப்பு கண்ணோட்டம் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:எதிர்காலத்தை புதிதாக திட்டமிடுவதற்கான வாய்ப்பு நமக்கு
 மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; கவர்னர் தமிழிசை

புதுச்சேரி : 'மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம்' என, கவர்னர் தமிழிசை பேசினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு, புதுச்சேரி கிளை சார்பில், 75-வது ஆண்டில் சுதந்திர இந்தியா - புதுச்சேரி சிறப்பு கண்ணோட்டம் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:எதிர்காலத்தை புதிதாக திட்டமிடுவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதால், 2047 ஆண்டை நோக்கி முன்னேறுவதற்கான பார்வையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

வரும் 2047 ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தை நாம் எப்படி பார்க்க விரும்புகிறோம். தேசிய வளர்ச்சியில் நம்முடைய பங்களிப்பு, தனித்துவம் என்ன என்பதை ஆராய வேண்டும்.நமது குழந்தைகள் குடும்பத்தினரின் ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றில் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் என்ன என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

பசுமையான, புதுமையான, பசி இல்லாத, சுற்றுச் சூழல் துாய்மையான, மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நோய்கள் இல்லாத புதுச்சேரியை சி.ஐ.ஐ., போன்ற நிறுவனங்களின் உதவியோடு ஏற்படுத்த முடியும்.கொரோனா இரண்டாவது அலையை மிக கவனமாக எதிர்கொண்டோம். மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X