மேலும் 3 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
காபூல்-ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன.இதைத் தொடர்ந்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள், அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.நேற்று நடத்திய தாக்குதல் வாயிலாக மூன்று மாகாணங்களை தலிபான்கள்

காபூல்-ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாணங்களை கைப்பற்றியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன.



latest tamil news


இதைத் தொடர்ந்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள், அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.நேற்று நடத்திய தாக்குதல் வாயிலாக மூன்று மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். இதன் மூலம் 13 மாகாணங்கள் தலிபான்கள் வசம் வந்துள்ளன. மூன்று நாட்களாக நீடித்த சண்டைக்குப் பின் ஹெல்மண்டு மாகாண தலைநகர் லஷ்கர் கா தலிபான்களிடம் வீழ்ந்தது. ஜபுல் மாகாண தலைநகர் குவாலட், உருஸ்கன் மாகாண தலைநகர் திரின் கோட் ஆகியவற்றை தலிபான்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து மாகாண கவர்னர் விமானம் வாயிலாக காபூலுக்கு தப்பிச் சென்றார். அரசு அதிகாரிகள், தலிபான்களிடம் சரண் அடைந்தனர். அரசு கட்டடங்களில் தலிபான் கொடி ஏற்றப்பட்டது. காந்தகார், ஹீரட் நகரங் களை கைப்பற்றிய தலி பான் படையினர் அங்குள்ள கவர்னர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே ஆப்கனில் தலிபான்கள் கைப்பற்றிய நகரங்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக் கானோர் தலைநகர் காபூலில் தஞ்சமடைந்து வருகின்றனர். தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கி உள்ளதாக நேற்று தகவல் ெவளியானது. இதனால் எந்த நேரத்திலும் காபூல் தலிபான்கள் வசம் வந்து விடும் சூழல் உருவாகியுள்ளது.


latest tamil news


நிலைமை மோசமானதை அடுத்து அமெரிக்கா, ஆப்கனில் உள்ள அதன் துாதரக அதிகாரிகளை பத்திரமாக அழைத்து வர, 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன், 600 ராணுவத்தினரை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர உள்ளது. கனடா, ஆப்கனில் உள்ள அதன் துாதரக அதிகாரிகளை அழைத்து வர, சிறப்பு அதிரடி படையை அனுப்ப உள்ளது.இதற்கிடையே மேற்காசிய நாடான கத்தாரில் தலிபான் - ஆப்கன் அரசு இடையிலான பேச்சில் முன்னேற்றம் இல்லை. அதிகார பகிர்வுக்கு ஆப்கன் அரசு சம்மதித்த போதிலும், அதை தலிபான்கள் ஏற்காததால் பேச்சில் சுமூக தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-202115:16:10 IST Report Abuse
அருணா கை பற்றி என்ன பயன் உங்களை யாரும் பின்பற்ற வில்லை. மாட்டார்கள் மத வெறி.
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
14-ஆக-202114:58:12 IST Report Abuse
BALOU அமெரிக்கா தன் சொந்த லாபத்திற்காக ஆப்கானிஸ்தான் பெண்கள் .குழந்தைகளை தலிபான்களிடம் அடகு வெய்த்து விட்டது இதற்க்கு அமேரிக்கா பதில் சொல்லியே ஆகவேண்டும் காலம் இவர்களை சும்மாவிடாது .
Rate this:
Cancel
14-ஆக-202114:53:14 IST Report Abuse
பேசும் தமிழன் ஒரே ஒரு அணுகுண்டு போட்டு....... மனித குலத்துக்கு எதிரான இந்த கும்பலை ஒழித்து கட்டினால்... அமெரிக்கா மற்றும் ரஷ்யா க்கு புண்ணியமா போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X