இந்தியா

புதுச்சேரிக்கு ரூ.3,040 கோடி நிதி உதவி; முன்னாள் எம்.பி., கோரிக்கை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'புதுச்சேரிக்கு ரூ.3,040 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்' என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசு அலசி ஆராயாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு வெறும் ரூ.1724.77 கோடியை ஒதுக்கி இருப்பது சரி இல்லை. இத்தொகையை புதுச்சேரி அரசு வாங்கி, அதை அப்படியே கடந்த கால கடனை திருப்பி செலுத்தவே பயன்படும்.இந்த ஆண்டுக்கு

புதுச்சேரி : 'புதுச்சேரிக்கு ரூ.3,040 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்' என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:மத்திய அரசு அலசி ஆராயாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு வெறும் ரூ.1724.77 கோடியை ஒதுக்கி இருப்பது சரி இல்லை. இத்தொகையை புதுச்சேரி அரசு வாங்கி, அதை அப்படியே கடந்த கால கடனை திருப்பி செலுத்தவே பயன்படும்.இந்த ஆண்டுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ 9,050 கோடி பட்ஜெட் நிதியை நிறைவேற்ற இன்னும் ரூ. 7,325 கோடியை புதுச்சேரி அரசு திரட்டியாக வேண்டும்.

இது, மிக கடினமான காரியம். இதில் தனது சொந்த நிதியாக ரூ. 4,700 கோடி, புதிய கடனாக ரூ.1,300 கோடி என மொத்தமாக ரூ 6 ஆயிரம் கோடியை திரட்ட முடியும். மீதமுள்ள பற்றாக்குறையான ரூ. 1,325 கோடியை மத்திய அரசு தான் கூடுதலாக வழங்க வேண்டும்.எனவே, இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதியுதவி மொத்தமாக ரூ. 3,040 கோடியாக திருத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டும்.

புதுச்சேரியை 15வது நிதிக்குழுவில் சேர்த்திருந்தால், சட்டப்படி ரூ. 3,518 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கும். நிதிக்குழுவில் சேர்க்கப்படாததால் புதுச்சேரி இந்த இழப்பை ஆண்டுதோறும் சந்தித்து வருகிறது. இந்த அநீதியான போக்கை மத்திய அரசு உணர வேண்டும். எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு மத்திய அரசு பெரு மனதோடு புதுச்சேரிக்கு ரூ. 3040 கோடி நிதி உதவியை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X