பொது செய்தி

தமிழ்நாடு

உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வதை கேளுங்க!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பழங்களை உண்பது ஆரோக்கியமான பழக்கம். பழங்களை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்து, எப்போதும் ஒரு விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது.ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில், பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் என்ற, தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.வெறும் வயிற்றில் நல்ல பயன்ஆயுர்வேதத்தின்படி, பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.

முக்கியமாக, காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திய பின், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். உடனடி ஆற்றல் ஆதாரமாக பழங்கள் இருப்பதால், அவற்றை முதல் உணவாக அல்லது இடை உணவாக மற்றும் பயிற்சிக்கு பிந்தைய உணவாக எடுத்துக்கொள்ளலாம்.நன்கு மென்று சாப்பிடுங்கள்பழச்சாறுகளுக்கு பதிலாக, பழங்களை அப்படியே நன்றாக மென்று சாப்பிடவும். ஜூஸ் போலில்லாமல் பழங்களில் பழசதைகள், தோலில் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இவை, செரிமான இயக்கத்திற்கு உதவும். பழங்களிலுள்ள சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதால், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
காத்திருக்க வேண்டாம்
பழங்களை வெட்டி, பல மணி நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெட்டி குறைந்தது, 15 நிமிடத்திற்குள்ளாக சாப்பிட வேண்டும். அதே சமயம், எந்த உணவுக்கு பின்பும், உடனடியாக பழங்களை சாப்பிடக் கூடாது. இது, செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உணவுக்கு பிறகு குறைந்தது, இரண்டு மணி நேரம் காத்திருந்து, பழங்களை சாப்பிட வேண்டும்.
பருவகால பழங்கள்
இன்றைய நவீன விவசாய முறைகளால், பெரும்பாலான காய்கறி, பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. அதிக நன்மைகளை பெற குறிப்பிட்ட பருவகால பழங்களை எடுத்துக்கொள்ளவும்.பருவகால உணவுகள், நேரிடையாக அறுவடை செய்யப்பட்டு கிடைப்பதால், பிரஷ்ஷாக இருக்கும். அதிக சுவையுடன், ஊட்டச்சத்தும் மிக்கவையாக இருக்கும்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X