இந்தியா

நிலம் அபகரித்தால் குண்டர் சட்டத்தில் கைது; ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நிலம் அபகரிப்பு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்க சாமி ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்;புதுச்சேரியில் நில அபகரிப்பு செய்பவர்கள் வீடு அபகரிப்பு செய்பவர் கள், பழைய பிரெஞ்சு தெரிந்தவர்களை வைத்துகொண்டு அசல் ஆவணங்களை போல போலி பத்திரம் தயார்

புதுச்சேரி : நிலம் அபகரிப்பு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்க சாமி ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்;புதுச்சேரியில் நில அபகரிப்பு செய்பவர்கள் வீடு அபகரிப்பு செய்பவர் கள், பழைய பிரெஞ்சு தெரிந்தவர்களை வைத்துகொண்டு அசல் ஆவணங்களை போல போலி பத்திரம் தயார் செய்து சொத்துகளை அபகரிக்கின்றனர்.எங்களிடம் டாக்குமென்ட் இருக்கிறது என, சொத்தில் பங்கு கேட்டு மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் தைரியமாக உலா வருகின்றனர். பிரச்னை வேண்டாம் என பொதுமக்கள் மிரண்டு பணம் கொடுத்து தீர்த்து கொள்கிறார்கள்.

கடந்த 15 நாட்களுக்கு முன் போலி பத்திரம் தயாரித்து கொடுத்த மஞ்சினி என்பவரை கைது செய்து, உருளை யன்பேட்டை போலீசார் விசாரித்தபோது ரஜினிஷ் ராய், பனையபுரம் மதியழகன் ஆகியோர் வில்லியனுார் சொத்தை அபகரிக்க போலி பத்திரம் தயார் செய்து கொடுத்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளனர். அவரிடமிருந்து 83 போலி அரசு சீல்களை கைப்பற்றி உள்ளனர்.எனவே நில அபகரிப்பு செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதோடு, உடனடியாக அந்த போலி பத்திரத்தை நீக்கி, நேர்மையை நிலை நாட்ட வேண்டும்.

நீதியை நிலை நாட்ட அறிக்கை வெளியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வருவாய் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு பாராட்டுகள்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X