இந்தியா

வார்டு ஒதுக்கீடு பணியில் குளறுபடி; என்.ஆர்.காங்., பா.ஜ., புறக்கணிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வார்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடியை சரிசெய்த பின், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, குலுக்கல் முறை வார்டு ஒதுக்கீடு பணியை என்.ஆர்.காங்., பா.ஜ., புறக்கணித்தன.புதுச்சேரியில் 5 நகராட்சி, 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளது. இதற்கு 2006ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. அதன்பிறகு நடத்தப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு செய்து, 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல்
 வார்டு ஒதுக்கீடு பணியில் குளறுபடி;  என்.ஆர்.காங்., பா.ஜ., புறக்கணிப்பு

புதுச்சேரி : வார்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடியை சரிசெய்த பின், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, குலுக்கல் முறை வார்டு ஒதுக்கீடு பணியை என்.ஆர்.காங்., பா.ஜ., புறக்கணித்தன.

புதுச்சேரியில் 5 நகராட்சி, 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளது. இதற்கு 2006ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. அதன்பிறகு நடத்தப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு செய்து, 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது.கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து, ஜூன் 21ம் தேதி, வெளியிடப்பட்டது.

அதன் பின்பு, வார்டு ஒதுக்கீடு பணி துவங்கியது. முதற்கட்டமாக அட்டவணை இனத்தவர், அட்டவணை இன பெண்கள் மற்றும் பொது பெண்கள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு முடிந்தது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான வார்டு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று தேர்தல் அலுவலகத்தில் துவங்கியது. மாநில தேர்தல் ஆணையர் ராய்பி தாமஸ், தேர்தல் சிறப்பு பணி அலுவலர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் தலைமை தாங்கினர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதி கள் பங்கேற்றனர்.


சலசலப்பு


புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் நகராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் வார்டுகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோர், மக்கள் தொகை விகிதாச்சாரம் அடிப்படையில் வார்டு ஒதுக்க வேண்டும்.

புதுச்சேரியில் ஒரு வார்டில் 8,000 முதல் 9,000 வாக்காளர்கள் உள்ளனர். மாகி, ஏனாமில் ஒரு வார்டில் 3,000 பேர் மட்டுமே உள்ளனர். மாகி நகராட்சியில் எஸ்.சி., மக்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே வார்டு மறுசீரமைப்பு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்' என்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால் பேசுகையில், சட்டசபை தேர்தலின்போது கொரோனா அதிகரித்து, புதுச்சேரியில் 3,000 பேர் இறந்துள்ளனர். தற்போது 3வது அலை வரும் என கூறும் நேரத்தில் தேர்தல் நடத்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும்' என்றார்.


சமாதானம்


தேர்தல் ஆணையர் ராய்பி தாஸ், வார்டு மறுசீரமைப்பு, உள்ளாட்சித்துறை மேற்கொண்டது. தேர்தல் துறைக்கு வழங்கிய தகவல்கள் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது.எனவே, இந்த பிரச்னையை தவிர்த்துவிட்டு, வார்டு ஒதுக்கீடு செய்ய ஒத்துழைப்பு தாருங்கள். கொரோனா தொற்று பரவல் தொடர்பாக, அரசின் ஆலோசனை கேட்ட பின்பே தேர்தல் நடத்தப்படும்' என்றார்.


வெளிநடப்பு


ஐந்து நகராட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டு ஒதுக்கீடு முடிந்த பிறகு வார்டு மறுசீரமைப்பு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்.கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தினால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, 6 மாதங்களுக்கு பின், தேர்தல் நடத்த வேண்டும் என கோரி, பா.ஜ., என்.ஆர்.காங்., கட்சியினர், வார்டு ஒதுக்கீடு பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.காங்., தி.மு.க., கம்யூ., கட்சிகள் முன்னிலையில் தொடர்ந்து வார்டு ஒதுக்கீடு பணி நடந்து முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X