இந்தியா

பாரத ஸ்டேட் வங்கி கடனுதவி முகாம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பாரத ஸ்டேட் வங்கி, புதுச்சேரி வேளாண் அபிவிருத்தி கிளை சார்பில், பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதியான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், மெகா கடனுதவி முகாம் நடந்தது.புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சியுடன் இணைந்து நடத்திய இம்முகாமில் 75 பேருக்கு கடன் அனுமதி, பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் தலா ரூ. 10 ஆயிரம் வீதம்

புதுச்சேரி : பாரத ஸ்டேட் வங்கி, புதுச்சேரி வேளாண் அபிவிருத்தி கிளை சார்பில், பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதியான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், மெகா கடனுதவி முகாம் நடந்தது.

புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சியுடன் இணைந்து நடத்திய இம்முகாமில் 75 பேருக்கு கடன் அனுமதி, பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.உள்ளாட்சித் துறை செயலர் வல்லவன், பாரத ஸ்டேட் வங்கி பிராந்திய மேலாளர் ேஹமா, இந்தி யன் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் சந்திரகுமரன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், மாநில திட்ட மேலாளர் சசிக்குமார், கிளை மேலாளர் பிரவீன்குமார் கலந்து கொண்டனர்.பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி வேளாண் அபிவிருத்தி கிளை மூலம் இதுவரை 375க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு கடன்களை வழங்க அனுமதி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X