486 ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு| Dinamalar

இந்தியா

486 ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பதவி உயர்வு

Added : ஆக 14, 2021
Share
புதுச்சேரி : பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த 486 ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு சிறப்பு நிலை ஏட்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில காவல் துறையில் ஐ.ஆர்.பி.என்., 2005ல் உருவாக்கப்பட்டது. இப்பிரிவுக்கு அந்த ஆண்டே 700 பேர் பணிக்கு எடுக்கப்பட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாக

புதுச்சேரி : பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த 486 ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு சிறப்பு நிலை ஏட்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில காவல் துறையில் ஐ.ஆர்.பி.என்., 2005ல் உருவாக்கப்பட்டது. இப்பிரிவுக்கு அந்த ஆண்டே 700 பேர் பணிக்கு எடுக்கப்பட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாக இருந்தது.இவர்களில் 120 பேர் மட்டும் சீனியாரிட்டி அடிப்படையில் ஏட்டுக ளாகவும், 12 பேர் உதவி சப் இன்ஸ்பெக்டர்களாகவும் உள்ளனர். மற்றவர்கள் ஐ.ஆர்.பி.என்., காவலர்களாக இருந்து வந்தனர்.

ஐ.ஆர்.பி.என்., உதவி சப் இன்ஸ்பெக்டர்களில் இருந்து சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி அளிக்க போலீஸ் தலைமையகம் முடிவு செய்திருந்த நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கும் காவலர்கள் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.அவர்களுக்கு சிறப்பு நிலை ஏட்டுகளாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்து, உள்துறை வாயிலாக கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

இந்த கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்தார்.இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த ஐ.ஆர்.பி.என்., காவலர்கள் 486 பேர் சிறப்பு நிலை ஏட்டுகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X