இந்தியா

சென்டாக் மாணவர் சேர்க்கை கையேடு வெளியீடு! வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி: 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கையேட்டை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டார்.இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்டாக் மாணவர் சேர்க்கை கையேட்டை வெளியிட்டு கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழில் நுட்ப கல்லுாரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளில் மொத்தம் 8,167
சென்டாக் மாணவர் சேர்க்கை கையேடு வெளியீடு! வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கையேட்டை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்டாக் மாணவர் சேர்க்கை கையேட்டை வெளியிட்டு கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழில் நுட்ப கல்லுாரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் 'நீட்' அல்லாத இளநிலை படிப்புகளில் மொத்தம் 8,167 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (நேற்று) முதல் வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கொரோனா காரணமாக புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக் கான சேர்க்கை 'நீட்' தேர்வு நடத்திய பின்னர் அறிவிக்கப்படும். சென்டாக் தொடர்பான சந்தேகங்களுக்கு www.centacpuducherry.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பிற மாநில மாணவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் 'நீட்' அல்லாத படிப்புகளுக்கு தங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


சுயநிதி மாணவர்கள்


புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்கள் பி.டெக், பி.எஸ்சி., வேளாண் மற்றும் தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி., நர்சிங், பிசியோதெரபி, பி.எஸ்சி., (எம்.எல்.டி., எம்.ஆர்.ஐ.ட்டி), பி.பார்ம் ஆகிய படிப்புகளுக்கு சுயநிதி இட ஒதுக்கீடுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக் கலாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பேட்டியின் போது உயர்கல்வித்துறை செயலர் வல்லவன், கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு உடனிருந்தனர்.


பாடப்பிரிவுகள்


தொழில்முறை படிப்புகள்: பி.டெக்., பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை; கால்நடை மருத்துவம்; பி.எஸ்சி., நர்சிங்; பிசியோதெரபி; பி.எஸ்சி., (எம்.எல்.டி., எம்.ஆர்.ஐ.டி.,); பி.பார்ம்; பி.ஏ. எல்.எல்.பி., (5 ஆண்டு), பட்டய படிப்பு (டி.ஜி.என்.எம்., டி.ஏ.என்.எம்., டி.சி.இ.சி., டி.எம்.எல்.டி., டி.டி.டி, டி.ஏ.பி.டி., டி.சி.ஆர்.ஏ.,)கலை, அறிவியல் மற்றும் வணிகம்: பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., நுண்கலை படிப்புகளான பி.வி.ஏ.,


பள்ளிகள் திறப்பு


பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 15ம் தேதிக்கு பிறகு முதல்வருடன் கலந்து ஆலோசித்து, கவர்னரிடம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் அமல்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவது குறித்தும், அதில் உள்ள சாதக, பாதகங்கள் மற்றும் அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X