இந்தியா

50 சதவீத இடம் ஒதுக்கீடு காங்., தலைவர் வலியுறுத்தல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 1,579 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 363 மருத்துவ இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள 1,217 இடங்கள் வெளி மாநில மாணவர்களுக்கே

புதுச்சேரி : நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 1,579 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 363 மருத்துவ இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள 1,217 இடங்கள் வெளி மாநில மாணவர்களுக்கே கிடைக்கிறது.மத்திய அரசு 2019ல் கொண்டு வந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை உடனே புதுச்சேரியில் அமல்படுத்தி, நிகர்நிலை மருத்துவ கல்லுாரிகளிலும், தனியார் கல்லுாரிகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் அளிக்க வேண்டும். இதன் மூலம், புதுச்சேரி மாணவர்களுக்கு 789 மருத்துவ இடங்கள் கிடைக்கும். வாய்ச்சொல் வீரத்தை விட்டு, செயலில் இறங்கி மாணவர்களின் நலனை காக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X