பிட் இந்தியா விடுதலை ஓட்டம்| Dinamalar

இந்தியா

'பிட் இந்தியா' விடுதலை ஓட்டம்

Added : ஆக 14, 2021
Share
புதுச்சேரி : பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த 'பிட் இந்தியா விடுதலை 2.0' ஓட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.இந்தியாவின் 75-வது சுதந்திர நாளை முன்னிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், 'பிட் இந்தியா - விடுதலை ஓட்டம் 2.0' நேற்று காலை நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்ற ஓட்டத்தை அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர்

புதுச்சேரி : பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த 'பிட் இந்தியா விடுதலை 2.0' ஓட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர நாளை முன்னிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், 'பிட் இந்தியா - விடுதலை ஓட்டம் 2.0' நேற்று காலை நடைபெற்றது.புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைபெற்ற ஓட்டத்தை அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 75க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் விளையாட்டு இயக்குனரகம் மற்றும் உடற்கல்வி துறை சார்பில் நடந்த சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டத்தை துணை வேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X