இந்தியா

பள்ளி இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வீரமாமுனிவர் அரசு பள்ளியை இட மாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி, லப்போர்த் வீதியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மேல்நிலை பிரிவில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி கட்டடத்தை பயன்படுத்திக்கொள்ள

புதுச்சேரி : வீரமாமுனிவர் அரசு பள்ளியை இட மாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, லப்போர்த் வீதியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மேல்நிலை பிரிவில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி கட்டடத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக, கண்டாக்டர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள திரு.வி.க., பள்ளிக்கான கட்டடத்தை, வீரமாமுனிவர் அரசு பள்ளிக்கு ஒதுக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதனை கண்டித்து வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பழமைமிக்க பள்ளியை இடமாற்றம் செய்ய கூடாது என கோஷமிட்டனர். வீராமாமுனிவர் அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் சங்கம், முன்னாள் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். வீரமாமுனிவர் அரசு பள்ளியை இட மாற்றம் செய்ய கூடாது என மனுவும் அளிக்கப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X