தமிழ்நாடு

துறைமுகத்தில் கப்பல் அணையும் தளங்கள் தயார்! கடலூரில் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கப்பல்கள் அணையும் தளங்கள் தயாராகி விட்டது.ஆசியாவின் பழமையான துறைமுகங்களில் கடலுார் துறைமுகமும் ஒன்று. பரவனாறு, உப்பனாறு ஆகியன கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்தில் இயற்கையாக 15 மீட்டர் ஆழம்
துறைமுகத்தில் கப்பல் அணையும் தளங்கள் தயார்! கடலூரில் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டம்

கடலுார் : கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கப்பல்கள் அணையும் தளங்கள் தயாராகி விட்டது.

ஆசியாவின் பழமையான துறைமுகங்களில் கடலுார் துறைமுகமும் ஒன்று. பரவனாறு, உப்பனாறு ஆகியன கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்தில் இயற்கையாக 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ட் லிமிட்டெட் கம்பெனியில் 'ப்ரொப்லின்' வாயு இறக்குமதி செய்த போது, அப்பகுதி மக்களின் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 2002ம் ஆண்டிற்கு பிறகு, இந்த துறைமுகத்திற்கு கப்பல் வரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க, 2018ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய, மாநில அரசு களின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

துறைமுக முகத்துவாரம் ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் அமைக்க, இந்திய தொழில்நுட்ப மையம் - சென்னை (ஐஐடி) திட்ட வடிவம் ஏற்படுத்தியது. துறைமுகம் மேம்படுத்தும் பணி 2018 அக்டோபரில் துவங்கியது. இதற்காக துறைமுக முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில், 85 மீட்டர், வடக்கு பகுதியில் 210 மீட்டர் துாரத்திற்கு சிமென்ட் கான்கிரீட் கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது.

முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளம், 60 மீ., அகலம், 9 - 10 மீட்டர் ஆழம் வரை துார் வாரும் பணி நடந்தது. குஜராத் மற்றும் கொச்சினில் இருந்து இரண்டு துார்வாரும் கப்பல்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பணிகள் தொடர்ந்து நடந்த நிலையில், கடலுார் துறைமுகம் ரூ.135 கோடி செலவில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்படுத்தும் பணி விரைவில் முடித்து வணிக கப்பல் போக்குவரத்து துவங்கும் என, அரசு தரப்பில் தெரிவித்து பணி துரிதப் படுத்தப்பட்டது.

கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்குமதி செய்யும் வகையிலும் தலா 120 மீட்டர் நீளம், 21 மீட்டர் அகலம், 4.5 மீட்டர் உயரத்தில் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் அமைக்கும் பணி முடித்து, கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு தயாராகி விட்டது. மீதமுள்ள பணியும் முடியும் தருவாயில் உள்ளதால், கடலுார் துறைமுகப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X