பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப மாதாந்திர பட்ஜெட்டில்...

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கொரோனாவில் ஏற்பட்ட திடீர் வருமான இழப்பில், பலருக்கு சேமித்த பணம் பெரும் உதவியாக இருந்தது. சேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.இன்றைய சூழலில், குழந்தைகளுக்கு சிறிய வயது முதலே பணத்தை பற்றியும், அதை கையாளுவதும் குறித்து கற்றுத்தருவது முக்கியம். குறிப்பாக, ஐந்து வயது முதலே சேமிப்பு பழக்கத்தை, பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.சேமித்தால் பரிசு என
 குடும்ப மாதாந்திர பட்ஜெட்டில்...

கொரோனாவில் ஏற்பட்ட திடீர் வருமான இழப்பில், பலருக்கு சேமித்த பணம் பெரும் உதவியாக இருந்தது. சேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.இன்றைய சூழலில், குழந்தைகளுக்கு சிறிய வயது முதலே பணத்தை பற்றியும், அதை கையாளுவதும் குறித்து கற்றுத்தருவது முக்கியம். குறிப்பாக, ஐந்து வயது முதலே சேமிப்பு பழக்கத்தை, பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.சேமித்தால் பரிசு என சொல்லுங்கள்குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்றுத்தர உதவும் முதல்படி, உண்டியல். பெற்றோரும், உறவினர்களும் பணத்தை இதில் சேமிக்க அறிவுறுத்தலாம். குழந்தைகளை கட்டாயப்படுத்தாமல், சேமிப்பதை உற்சாக விளையாட்டாக மாற்றுங்கள். குறிப்பிட்ட பணத்தை சேமித்தால், ஒரு பரிசு வழங்கப்படும் என ஊக்கப்படுத்துங்கள்.பட்ஜெட்டில் குழந்தைகளுக்கும் பங்குபெரியவர்களாகிய நமக்கே வரவு, செலவு திட்டத்தை நிர்வகிப்பது, சவாலான விஷயமாக இருக்கும். இருப்பினும், வீட்டின் மாத பட்ஜெட்டை போடும் போது, குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். உங்கள் வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, மளிகை, மின்சார பில் ஆகியவற்றிற்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என, குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள்.அடிப்படை மற்றும் ஆடம்பரம்எந்த பொருள் நமக்கு அவசியமானது, எவை அநாவசியமானது என வேறுபடுத்துவது சேமிப்பில் முக்கியமானது. உணவு, இருப்பிடம், உடை, மருத்துவம், கல்வி அடிப்படை என்றும், சினிமா, ஸ்னாக்ஸ் அநாவசியம் என்றும் சொல்லிக்கொடுங்கள். பொருட்களை வாங்கும் போது எது அடிப்படை, எது ஆடம்பரம் என மதிப்பிடும் பழக்கத்தை, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.எல்லாமே சேமிப்புதான்சேமிப்பு பழக்கம் என்றால் பணத்தை மட்டும் சேமிப்பது இல்லை. ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி தந்தால் மொத்தமாக சாப்பிடாமல், வைத்து சாப்பிட பழக்குங்கள். தேவைக்கேற்ப பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. ஆகவே,பென்சில், பேனா, நோட்டுகள் போன்ற பொருட்களையும் முழுமையாக குழந்தைகள் பயன்படுத்திய பின்பு, புதிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.பணத்தை கண்காணிப்பதுசிறந்த சேமிப்பாளராக இருக்க, உங்கள் பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் பணம், அவர்கள் செலவு செய்தது என அனைத்தையும் ஒரு நோட்டில் எழுதச் சொல்லுங்கள். எப்படி பணம் செலவழிகிறது, எதற்காக அதிகம் செலவிடுகிறோம் என குழந்தைகள் அறிந்து கொள்வார்கள். செலவு முறையை அறிந்து கொள்வது, தேவையற்றதை தவிர்க்க உதவும்.பெற்றோர்களே 'ரோல் மாடல்!'நீங்கள் செய்ய வேண்டியது, அவர்களுக்கு ஒரு 'மாடலாக' இருப்பதுதான். குழந்தைகள் தங்கள் பெற்றோர் செய்யும் விஷயங்களை விரைவாக உள்வாங்கிக்கொள்வார்கள். நீங்களும் பணத்தை சேமிக்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள். சேமிப்பதால் கிடைத்த நன்மைகளை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எளிதாக உங்களை குழந்தைகள் பின்பற்றுவார்கள். சேமிப்பு பழக்கத்தையும் விரைந்து கற்றுக்கொள்வார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X