தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு! வீடு வீடாகச் சென்று விபரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சார்பில் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக வீடுகள் தோறும் சென்று கணக்கெடுத்து, விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் 45 வயதிற்கு மேற்பட்ட தொற்றா நோய் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து 2
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு! வீடு வீடாகச் சென்று விபரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சார்பில் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக வீடுகள் தோறும் சென்று கணக்கெடுத்து, விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் 45 வயதிற்கு மேற்பட்ட தொற்றா நோய் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து பெட்டகங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட உடல் நல கோளாறு உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த திட்டத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த 5ம் தேதி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 51 ஆயிரத்து 341 தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், 1,125 இயன்முறை சிகிச்சை நபர்களுக்கும், 918 நோய் ஆதரவு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கும் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளனர்.இதற்கான பயனாளர்களைக் கணக்கெடுக்கும் பணி நகராட்சி ஆரம்ப சுகாதார மையம் மூலம் துவங்கியுள்ளது.சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்புடன், தனியார் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் நகரின் அனைத்து வார்டுகளுக்கும் குழுக்களாக பிரிந்து வீடு, வீடாகச் சென்று அங்குள்ள நபர்கள் குறித்து முழுமையாக கணக்கெடுத்து வருகின்றனர்.

வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, வயது, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளதா, ரேஷன் கார்டு எண் ஆகியவை குறித்து முழுமையான விபரங்களை சேகரிக்கின்றனர்.இந்த தகவல்கள் மூலம் கள ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளர்களை உறுதி செய்து பட்டியலை தயார் செய்கின்றனர். அதன்பிறகு வெகு விரைவாக மருந்து வழங்கும் பணி துவங்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X