பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு வேலை கேட்டு முறையீடு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில், துாய்மை பணியாளர்களாக பாரதி, ராஜேஸ்வரி, வனிதா, கஸ்துாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். புதிய ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றவர், பணி வழங்க மறுத்துள்ளார். 4 பேருக்கும் மீண்டும் பணி வழங்கி, சம்பளம் வழங்க வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள்

கடலுார் : கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில், துாய்மை பணியாளர்களாக பாரதி, ராஜேஸ்வரி, வனிதா, கஸ்துாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். புதிய ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றவர், பணி வழங்க மறுத்துள்ளார்.

4 பேருக்கும் மீண்டும் பணி வழங்கி, சம்பளம் வழங்க வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்டத் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மகளிர் உதவி திட்ட இயக்குனர் ராஜ்குமார், போராட்ட இடத்திற்கு வந்து பேசினார். சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, மாவட்ட செயலாளர் விவேகானந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X