பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலங்களை வழங்கிய கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு கொடுத்தனர்.கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார், மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் ஆகியோரிடம்

நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலங்களை வழங்கிய கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மனு கொடுத்தனர்.

கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார், மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் ஆகியோரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழித்தேவன் மற்றும் பாண்டியன் ஆகியோர் கொடுத்த மனு:புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக தங்களது வீடு, நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளின் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும்.

என்.எல்.சி.,நிறுவனத்தின் சுரங்கப் பணிகளின் காரணமாக புவனகிரி தொகுதியில் பல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.இந்த மக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க என்.எல்.சி.,நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X