பொது செய்தி

தமிழ்நாடு

ஆடாத ஆட்டமில்லை... ஏறாத மேடை இல்லை! ஒன்பது வயதில் ஒரு சகலகலா வல்லவன்!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஒன்றரை வயதில் சிலம்பம் கற்றுக்கொண்டு மேடை ஏறிய சிறுவன், ஒன்பது வயதில் அனைத்து நாட்டுப்புற நடனங்களையும் கற்று தேர்ந்து, சாதனை படைத்து வருகிறான்.கோவை பேரூர் பச்சாபாளையம், தாரா அவென்யுவில் வசித்து வருபவர் ராஜசேகரன். இவரது மகன் நிதிஷ், கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.நாட்டுப்புற கலையில் ஆர்வம் கொண்ட நிதிஷ், தனது ஒன்றறை வயதில்
 ஆடாத ஆட்டமில்லை... ஏறாத மேடை இல்லை! ஒன்பது வயதில் ஒரு சகலகலா வல்லவன்!

ஒன்றரை வயதில் சிலம்பம் கற்றுக்கொண்டு மேடை ஏறிய சிறுவன், ஒன்பது வயதில் அனைத்து நாட்டுப்புற நடனங்களையும் கற்று தேர்ந்து, சாதனை படைத்து வருகிறான்.கோவை பேரூர் பச்சாபாளையம், தாரா அவென்யுவில் வசித்து வருபவர் ராஜசேகரன். இவரது மகன் நிதிஷ், கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.நாட்டுப்புற கலையில் ஆர்வம் கொண்ட நிதிஷ், தனது ஒன்றறை வயதில் சிலம்பம் ஆட துவங்கினான். இப்போது நிதிஷ்க்கு ஒன்பது வயதாகிறது.கரகாட்டம், பறையாட்டம், மரக்காலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என, அனைத்து நாட்டுப்புற நடனக்கலைகளையும் கற்று, மேடைகளில் அசத்தி வருகிறான். இவற்றுடன் நிற்கவில்லை, இப்போது பம்பை மற்றும் உடுக்கை இசையையும், நிதிஷ் கற்று வருகிறான்.நிதிஷின் திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் சார்பில், இலக்கியச் சிற்பி விருது, கலைத்தென்றல் விருது, கலைச் செம்மல் விருது, நாட்டுப்புற கலைஞர் விருது மற்றும் கலாம் கண்ட சாதனை நாயகன் விருது உள்ளிட்ட, 11 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இப்போது, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 பொருட்களை வைத்து கொண்டு, 75 நிமிடம் நிற்காமல், பல வகையான நடனங்கள் ஆடி, 'நோபல் புக் ஆப் ரெக்கார்டு' என்ற சாதனை புத்தகத்தில், இடம் பெற்று இருக்கிறான்.நிதிஷ் கூறுகையில், ''எல்லாம் அம்மா, அப்பா தந்த ஊக்கம்தான். விரைவில் தலையில் கரகம் வைத்துக்கொண்டு, சைக்கிளில் ஐந்து கி.மீ., துாரம் ஓட்டி, சாதனை செய்ய இருக்கிறேன். இப்படி பல சாதனைகள் செய்ய வேண்டும் என, எனக்கு ஆர்வமாக இருக்கிறது,'' என்கிறான் இந்த சகலகலா சாதனை சிறுவன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X