பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கே.எம்.சி.ஹெச்.,மருத்துவமனையில், 'வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை' என்ற, உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கலந்து கொண்டு, இறப்பின்போது, உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு, மரியாதை செய்யும் விதமாக, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசுகையில்,
 வாழ்க்கைக்கு  பிறகு வாழ்க்கை!

கே.எம்.சி.ஹெச்.,மருத்துவமனையில், 'வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை' என்ற, உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கலந்து கொண்டு, இறப்பின்போது, உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் குடும்பத்தினருக்கு, மரியாதை செய்யும் விதமாக, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசுகையில், ''மூளைச்சாவு அடைந்தவர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை, பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையிலும், உன்னத நோக்கத்திற்காக உடல் உறுப்பு தானத்தை வழங்கியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்,'' என்றார். இதில், கே.எம்.சி.ஹெச்.,மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X