பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 30 அடி உயரமுள்ள கொடி கம்பம் தற்காலிகமாக நடப்பட்டுள்ளது.நாளை சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், காவலர்களின் 'காட் ஆப் ஹானர்' அணிவகுப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 30 அடி உயரமுள்ள கொடி கம்பம் தற்காலிகமாக நடப்பட்டுள்ளது.நாளை சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், காவலர்களின் 'காட் ஆப் ஹானர்' அணிவகுப்பு ஒத்திகை நேற்று மாலை நடந்தது. ஒத்திகையை கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக் ஆகியோர் பார்வையிட்டனர்.

கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த தேசிய கொடியினை கலெக்டர் ஸ்ரீதர் ஏற்றி பார்த்தார். தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு காவலர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டனர்.ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜவகர்லால், சுப்பராயன், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, ஆர்.டி.,ஓ., சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், டி.எஸ்.பி.,க்கள் ராஜலட்சுமி, திருமேணி, இன்ஸ்பெக்டர் முருகேசன், தாசில்தார் பிரபாகரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X