கண்ணாடி பிரேம் தழும்பு மறைய | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணாடி பிரேம் தழும்பு மறைய

Added : ஆக 14, 2021
Share
மு ன்பெல்லாம் நடுத்தர வயதினர், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே கண்ணாடி அணிந்து வந்தனர். இப்போது, ஊட்டச்சத்து குறைபாட்டினால் சின்ன, சின்ன குழந்தைகளுக்கும் கண்ணாடி அணிகின்றனர்.மறுபுறம், டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், கண் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கின்றன.இவ்வாறு, கண்ணாடியை தொடர்ந்து அணிபவர்களின், மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்துவதால் தழும்புகள்,
 கண்ணாடி பிரேம் தழும்பு மறைய

மு ன்பெல்லாம் நடுத்தர வயதினர், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே கண்ணாடி அணிந்து வந்தனர். இப்போது, ஊட்டச்சத்து குறைபாட்டினால் சின்ன, சின்ன குழந்தைகளுக்கும் கண்ணாடி அணிகின்றனர்.மறுபுறம், டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், கண் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கின்றன.இவ்வாறு, கண்ணாடியை தொடர்ந்து அணிபவர்களின், மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்துவதால் தழும்புகள், கருப்பு நிறத்தில் வடு ஏற்படுகிறது. இவற்றை கவனிக்காவிட்டால், நிரந்தர வடுவாக மாறி விடும்.கண்ணாடியில் ஏற்படும் தழும்புகள் மறைய, எளிய டிப்ஸ் இதோ!வெள்ளரி சாறுவெள்ளரிக்காய் தழும்புகளை மறைத்து, முகத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காயை சிறிய துண்டாக வெட்டி எடுத்து, வடுக்கள் இருக்கும் இடத்தில், ஐந்து நிமிடங்கள் தேய்க்கலாம். வெள்ளரிக்காய் சாறை எடுத்து, தழும்புகள் இருக்கும் இடங்களில், மசாஜ் செய்வது போல தடவியும் கொடுக்கலாம்.எலுமிச்சை சாறுஎலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி, சருமத்தை பளபளப்பாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. எலுமிச்சையை அரையாக வெட்டி, பத்து நிமிடங்கள் மெதுவாக வடுக்கள் இருக்கும் இடத்தில் தடவலாம். இரண்டு நிமிடங்கள் அப்படியே காய விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம்.கற்றாழை ஜெல்மிகவும் அழுத்தமான மார்க்குகளிலும், கற்றாலை ஜெல் அற்புதமாக வேலை செய்யும். புதிதாக கற்றாழையை வெட்டி அதிலிருந்து ஜெல்லை, தழும்புகள் மீது தடவலாம். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில், குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல முடிவை காண்பீர்கள்.ஆரஞ்சு தோல்மார்க்கெட்டில் உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடியை வாங்கலாம் அல்லது வீட்டிலேயே செய்யலாம். பொடியுடன், பாலை நன்கு கெட்டியான பேஸ்ட் போல கலக்கவும். தழும்புகள் வடுக்கள் மீது தேய்த்து, அரை மணி நேரம் விட்டு பின்னர் கழுவவும்.உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கில் இருக்கும், 'கேடகோலேஸ்' எனும் நொதி, சருமத்தை பிரகாசமாக்கும். உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி, மிக்சியில் நறுக்கி, அதன் சாற்றை எடுக்கவும். பஞ்சில் சாற்றில் முக்கிய தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவலாம்.தேன்பாரம்பரியமாக தோல் சார்ந்த பிரச்னைகளுக்கு, தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் தேனை தடவினால், நீண்ட நேரம் கண்ணாடியை பயன்படுத்தியதால் ஏற்படும்வறட்சியை போக்கி, வடுக்களை போக்கும்.கூடுதல் நன்மையை பெற, தேனுடன், ரோஸ் வாட்டர் கலந்தும் பயன்படுத்தலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X