பொது செய்தி

தமிழ்நாடு

'தடை செய்த பொருட்களை விற்காதீர்கள்'

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் முதுநகரில் ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடலுார் துறைமுகம் பகுதி சார்பில் நடந்தது. கடலுார் கிளைத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி, குட்கா பொருட்கள் விற்பனை இல்லை என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட,

கடலுார் : கடலுார் முதுநகரில் ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடலுார் துறைமுகம் பகுதி சார்பில் நடந்தது.

கடலுார் கிளைத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கி, குட்கா பொருட்கள் விற்பனை இல்லை என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட, முதுநுகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பெற்றுக் கொண்டார். கிளைத் தலைவர் துரைராஜ் பேசுகையில், 'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் விற்கக் கூடாது. கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் தடை செய்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து விடுவார்கள். இது போன்ற சமயங்களில் வணிகர்களுக்கு ஆதரவாக சங்கம் செயல்படாது. கடலுார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

மண்டலத் தலைவர் சண்முகம், மாவட்ட செயலர் வீரப்பன், நகர செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பகுதி செயலர் சதீஷ் வரவேற்றார். உணவு பாதுகபாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுரேஷ், செல்லபாண்டி, சேகர், பாண்டியன், விக்னேஷ், மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X