பொது செய்தி

தமிழ்நாடு

நாளை சுதந்திர தினம்; போலீசார் தீவிர கண்காணிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.நாடு முழுவதும் சுதந்திர தின விழா, நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் விழாவில், கலெக்டர் சமீரன் கொடியேற்றி வைக்கிறார். கொரோனாவால், கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், போலீசார்
 நாளை சுதந்திர தினம்; போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை:சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.நாடு முழுவதும் சுதந்திர தின விழா, நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் விழாவில், கலெக்டர் சமீரன் கொடியேற்றி வைக்கிறார். கொரோனாவால், கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், போலீசார் அணிவகுப்பு நடக்க உள்ளது. இதற்காக வ.உ.சி., மைதானத்தில், நேற்று காலை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர பகுதியில் 1,500 போலீசாரும் மாவட்டத்தில், 900 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.கோவை ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் ஆகிய இடங்களில், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில்வே ஸ்டேஷன், இருப்பு பாதை பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை ரயில்வே ஸ்டேஷனில், மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். கோவை விமான நிலையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X