பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் அடுத்த கிளியனுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்.அப்போது, எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடையளவு சரியாக உள்ளதா, கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், தேவையான இட வசதி, மின்சார வசதி

வானுார் : வானுார் அடுத்த கிளியனுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடையளவு சரியாக உள்ளதா, கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், தேவையான இட வசதி, மின்சார வசதி மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாத வகையில் பாதுகாக்க தார்பாய் வசதிகள் இருக்கிறதா எனவும் விசாரித்தார்.

தொடர்ந்து எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி அமைக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், உதவி இயக்குனர் ஜோதி, தனித்துணை கலெக்டர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, தாசில்தார் சங்கரலிங்கம், வானுார் பிடிஓ.,க்கள் ராமதாஸ், நரசிங்கம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X