பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்; வரவேற்பும் விமர்சனமும்!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர்,'சிறுதுளி': பசுமை பரப்பை அதிகரிக்க, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுவோம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; போக்குவரத்து எளிதாகும். 'நமக்கு நாமே'
 பட்ஜெட்; வரவேற்பும் விமர்சனமும்!

வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர்,'சிறுதுளி': பசுமை பரப்பை அதிகரிக்க, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுவோம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; போக்குவரத்து எளிதாகும். 'நமக்கு நாமே' திட்டத்துக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், குளம், குட்டைகளை துார்வார முக்கியத்துவம் அளித்தால், பயனுள்ளதாக இருக்கும். சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மதுரை, திருச்சி, கோவை என அனைத்து நகரங்களையும் மேம்படுத்த வேண்டும்.ஜெயந்தி, இல்லத்தரசி, செல்வபுரம் : பட்ஜெட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு, ரூ.2,736 கோடி தள்ளுபடி செய்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. இதன் மூலம், பல்வேறு இல்லத்தரசிகள் பயன்பெறுவர். பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடன் தள்ளுபடி செய்திருப்பது பாராட்டுக்குரியது.சுசீலா, இல்லத்தரசி, எல்.ஐ.சி.,காலனி : எட்டு லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களை போன்றவர்களுக்கு வரப்பிரசாதம். அதேபோல், குடிநீர் தேவையை போக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இல்லத்தரசிகள் குடிநீருக்காக அலைவது தவிர்க்கப்படும்.தீபிகா, தனியார் நிறுவன ஊழியர் காந்திபுரம்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும். 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதும், அதற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கியதும், மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று.சிவபிரகாஷ், ஸ்டேஷனரி கடை, பாப்பநாயக்கன்பாளையம்: பெட்ரோல் மீதான வரியில், மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் பெரிதும் பயனடையும். குறிப்பாக, சிறுதொழில் நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். பொருட்களின் விலை சற்று குறையும். இதே போல், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்பு வரவேற்புக்குரியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X