அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் கோவை எம்.பி., வரவேற்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பிற்கு, எம்.பி.,நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தை முதன்மைப்படுத்தி, ரூ.225 கோடி மதிப்பில், 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசின் சார்பில் அமைக்கப்படும் எனவும்,

கோவை:கோவை மாவட்டத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பிற்கு, எம்.பி.,நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தை முதன்மைப்படுத்தி, ரூ.225 கோடி மதிப்பில், 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசின் சார்பில் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், கிடைக்கும் வேலைவாய்ப்பினால் பல்லாயிரம் பேர் பயனடைவர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாய் குறைப்பு போன்றவை, மக்கள் பயன்பெறும் திட்டங்களாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X