பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு போகும்போது மறக்காம சொல்லிட்டுப்போங்க!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:வெளியூர் செல்பவர்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க, வாட்ஸ் ஆப் மற்றும் மொபைல் போன் எண்களை, மாநகர போலீசார் வழங்கியுள்ளனர்.கோவை மாநகரில் வழிப்பறி, செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வெளியூர் செல்லும் நபர்களின் வீடுகளை குறிவைத்து, கொள்ளை

கோவை:வெளியூர் செல்பவர்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க, வாட்ஸ் ஆப் மற்றும் மொபைல் போன் எண்களை, மாநகர போலீசார் வழங்கியுள்ளனர்.கோவை மாநகரில் வழிப்பறி, செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வெளியூர் செல்லும் நபர்களின் வீடுகளை குறிவைத்து, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து போலீசார் மூலம், வெளியூர் செல்பவர்களின் வீடுகள், தனியார் வசிக்கும் முதியோரின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகவல் தெரிவிப்பதற்கான பிரத்யேக எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து, கோவை மாநகர போலீசார் கூறியுள்ளதாவது:வெளியூர் செல்லும் நபர்கள், கோவை மாநகர போலீசார் அறிமுகப்படுத்தியுள்ள, 94981 81213 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். 81900 00100 என்ற எண்ணுக்கு, வாட்ஸ்ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், வீட்டின் முகவரி அடிப்படையில், அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன் ரோந்து போலீசார் மூலம், கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர், தகவல் தெரிவித்தால் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன் ரோந்து போலீசார் கண்காணித்து, தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X