பொது செய்தி

தமிழ்நாடு

முப்படைகளுக்கு தேவையான சீருடை தயாரிக்கும் 'ரோஷன்'

Added : ஆக 14, 2021
Share
Advertisement
முப்படைகளுக்கு தேவையான சீருடைகள், கேப் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது, கோவை ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் செயல்படும், ரோஷன் ஆர்மி ஸ்டோர்ஸ்.இதன் உரிமையாளர் ஷாகுல் கூறியதாவது:எங்கள் ரோஷன் ஆர்மி ஸ்டோர்ஸ், 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கிருந்து, தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு, ராணுவம், விமானப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு

முப்படைகளுக்கு தேவையான சீருடைகள், கேப் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது, கோவை ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ் பகுதியில் செயல்படும், ரோஷன் ஆர்மி ஸ்டோர்ஸ்.இதன் உரிமையாளர் ஷாகுல் கூறியதாவது:எங்கள் ரோஷன் ஆர்மி ஸ்டோர்ஸ், 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கிருந்து, தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு, ராணுவம், விமானப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, அதிவிரைவு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக காவல் துறை, வனத்துறை மற்றும் தேசிய மாணவர் படை உள்ளிட்ட துறையினருக்கு, தேவையான சீருடைகள் தயாரித்து தருகிறோம்.இத்துறையினருக்கு தேவையான, பேட்ஜ், ரிப்பன், கேப், மெடல், பெல்ட் மற்றும் டேபிளில் வைக்கப்படும், தேசிய மற்றும் ராணுவ கொடி உள்ளிட்ட துறை சார்ந்த பொருட்களை, அதன் தன்மை மாறாமல், நேர்த்தியாக தயாரித்து தருகிறோம்.ராணுவ விமானத்துக்கான பொருட்களும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின அணிவகுப்புக்கான நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களும் தயாரிக்கிறோம்.விமானப்படை ெஹலிகாப்டரில் பறக்க விடும், தேசிய கொடி முதல் அனைத்து வகையான கொடிகளும் தயாரித்து வழங்குகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X